பொலீசார் அட்டகாசம் செய்தால் இந்த தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து முறைப்பாடு செய்யுங்கள்..!!

Share this post:

police

காவற்துறை அதிகாரிகளின் நடத்தைகள் சம்பந்தமாக முறைப்பாடுகளை 24 மணிநேரம் இயங்கும் 071 -0361010 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிய தருமாறு தேசிய காவற்துறை ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் செயலாளர் என். ஆரியதாச பொதுமக்களிடம் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

காவற்துறை அதிகாரிகளால், பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் குறித்த முறைப்பாடுகளை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப சூழலில் இருக்கும் தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் பிரதான அலுவலகத்திலும் முன்வைக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை 8 மாகாணங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அலுவலகங்களிலும் செய்ய முடியும் எனவும் தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...