ரணிலின் ராஜதந்திரத்தால் முடிவுக்கு வரும் மகிந்தவின் உச்சகட்ட அரசியல் வாழ்வு..!!

Share this post:

mah

கடந்த வாரம் முழுவதும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெருத்தெருவாக வலம் வந்த காட்சி சகல ஊடகங்களிலும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டிருந்தன.

ஆட்சியை இழந்த பின்னர் மகிந்த ராஜபக்சவின் மிகப்பெரிய அரசியல் நகர்வாக இதனை பல அரசியல் அவதானிகளும் எடுத்துக்காட்டியிருந்தாலும் இது மகிந்த ராஜபக்சவின் மற்றுமொரு அரசியல் தோல்வியாகவே பார்க்கப்படுகின்றது.

2015ம் ஆண்டு தை மாதத்தோடு தனது ஆட்சி அதிகாரங்களில் இருந்து இறங்கிய பின்னர் மகிந்த ராஜபக்ச, தனது அரசில் மீள் வருகைக்கான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும், அவரின் மிகப்பெரிய அரசியல் நகர்வென்பது பாதயாத்திரையாகத்தான் இருக்க முடியும்.

ஆனால் அடுத்தடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மகிந்தவின் மீள் எழுச்சியை தடுத்து, நிறுத்தி தமது அரசின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துபவர்களாகவே இருக்கின்றனர்.

மகிந்தவின் மீள் எழுச்சி இனிமேல் எந்தக் காலத்திலும், நடைபெறாது என்பதை முதலில் ரணில் நிரூபித்தது, தேசிய அரசாங்கத்தை உருவாக்கியதன் மூலம் உறுதிப்படுத்தியிருந்தார்.

மகிந்த ராஜபக்சவுடன் இருந்த பலரும் நல்லாட்சியின் தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களானார்களே தவிர மகிந்தவுடன் இணைந்து நிற்கவில்லை.

ஆனால் மகிந்தவோடு தீவிர பிடியில் இருக்கும் ஒரு சிலரைத் தவிர, மற்றைய எல்லோரும் மைத்திரி ரணில் கூட்டுக்குள் தான்.

இந்நிலையில் தான் மகிந்த ராஜபக்சவின் அதிகாரக் கனவுகள் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

முன்னதாக தேசிய அரசாங்கம், இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதனை ரணிலும் தெரிவித்திருந்தார். ஆனால் இப்பொழுது அதில் மாற்றம் வந்திருப்பதை உணரமுடிகின்றது.

மகிந்த ராஜபக்ச நிழல் அமைச்சரவையை அமைத்து, அதற்கு தன்னை பிரதமராகவும் நியமித்துக் கொண்டுள்ளார். அவர் அதிகாரத்தில் இருந்ததை இன்னமும் மறக்கவும் இல்லை. அதிகாரம் இல்லாமல் உறங்கக் கூடமுடியாத நிலையில் தான் இருக்கின்றார்.

அதிகாரம் இல்லாமல் மகிந்த இல்லை. அதிகாரமே மகிந்த தான் என்று கூறுமளவிற்கு அதிகார மோகம் கொண்ட மகிந்த, பேச்சுக்கேனும் பிரதமராக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டோ என்னமோ நிழல் அமைச்சரவையை உருவாக்கியிருக்கிறார்.

ஆனால் அந்த அமைச்சரவையால் எந்தப் பலனும் இல்லை என்பது நிறுத்திட்டம். இந்நிலையில் தான் அவர் அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கிறார்.

இந்தமுறை மகிந்த ராஜபக்ச தெருவிக்கு இறங்கி அதிரடி காட்டியிருக்கிறார். மக்கள் தனக்காக. தன் பக்கமே சிங்கள மக்கள் என்று காட்ட எத்தனித்தார்.

எனினும் மறுபுறத்தில் மைத்திரியும், ரணிலும் இன்னொரு உடன்படிக்கைக்கு வந்து விட்டார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு இருந்த தேசிய அரசாங்கம் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, ஆட்சிக்காலம் முடியும் வரைக்கும் தாம் தான் அரசாங்கம் என்பதை அவர்கள் அறிவித்திருக்கின்றார்கள். ஆட்சியை இடையில் கவிழ்த்து மீண்டும் பதவிக்கு வரலாம் என்று நினைத்தவருக்கு இது பலத்த அடிதான்.

இன்னொரு புறத்தில், நிழல் அமைச்சரவையில் தாங்கள் இன்னென்ன அமைச்சர்கள் என்று அறிவித்திருக்கும், மகிந்த தரப்பில் இருக்கும் ஒட்டுண்ணிகள் சில பதவி ஆசையால் நிச்சையமாக மகிந்தவை நட்டாற்றில் விட்டுவிட்டு, ரணில் தரப்பில் இணையப் போவது உறுதி.

மகிந்த ராஜபக்ச, பாதயாத்திரையை இலங்கையில் மட்டுமல்ல, அமெரிக்காவரை மேற்கொண்டாலும், மைத்திரி ரணில் அரசை அவரால் அசைக்க முடியாது.

மகிந்தவின் மாயவிம்பங்கள் எல்லாமே இப்பொழுது உடைக்கப்பட்டு வருகின்றன. அவருடன் கூட இருப்பவர்கள் கட்சி தாவும் வரைக்கும் மகிந்தவின் ஆட்டம் தொடரலாம். அவர்களின் தாவலோடு மகிந்தவின் அரசியல் வாழ்வு வேதனையானதாகவே அமையும்.

மகிந்த ராஜபக்சவிற்கு ராகுவும் கேதுவும் உச்சத்தில் இருந்த காலம் ஒன்று இருந்தது தான். மகிந்த ராஜபக்சவிற்கான காலம் என்று ஒன்று இருந்தது தான். ஆனால் அது மீண்டும் வரப் போவதில்லை.

மகிந்தவின் உச்சகட்ட அரசியல் வாழ்விற்கு முடிவு வந்து விட்டது. அதில் இருந்து மீள்வது என்பது நிச்சயம் கடினம்.

Share This:
Loading...

Related Posts

Loading...