மாணவர்களை சீரழிக்க்கிறதா மட்டக்களப்பு கல்வி வலயம்….. அதிர்ச்சி செய்தி..! (Photos)

Share this post:

8.

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக அமையும் மட்டக்களப்பு கல்வி வலயம்.

தரம் 5 கல்விப் புலமைப் பரிசில் பரீட்சை என்பது பரீட்சையில் சித்தியடைந்து புலமைப் பரிசைப் பெறும் நோக்கத்தை விட்டு தற்பொழுது ஒரு மாணவனின், அம்மாணவனின் பெற்றோரின், அக்குடும்பத்தின் கௌரவத்தினை நிலைநாட்டும் பரீட்சையாக மாற்றமடைந்துள்ளதுடன், அம்மாணவனின் தலையில் சுமக்க முடியாத சுமையை சுமத்தி பெரும்பாலான மாணவர்களை நோயாளியாக மாற்றும் செயற்பாடும் நடைபெற்றுக்கொண்டு வருகின்றது.

மேலும் அரசாங்க வேதனம் பெறும் ஆசிரியர்கள் சிலரின் அதிக வருவாய்த் தரக்கூடிய சிறுகைத்தொழிலாகவும் மாறியுள்ளது.

அந்த வகையில் 2016ம் ஆண்டிற்கான புலமைப் பரீட்சைக்கு இன்னும் 13 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் மட்டக்களப்புக் கல்வி வலயமானது தமது வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் பரீட்சைக்குத் தயாராகவுள்ள மாணவர்களை அதிக பெறுபேற்றினை பெற வைப்பதற்கான நடவடிக்கைகளாக பல பயிற்சிப் பரீட்சைகளை நடாத்திக்கொண்டு வருகின்றது.

மேலும் அதன் பெறுபேறுகள் உடனுக்குடன் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுமுள்ளது.

எனினும் இங்கு வழங்கப்படுகின்ற வினாப்பத்திரமானது உரிய தரத்தினைக் கொண்டிருக்கவில்லை என்பது மிகவும் வருந்தத் தக்க விடயமாகவுள்ளது.

இதற்கு கடந்த வாரத்தில் வலயக்கல்விப் பணியகத்தால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கணிதப் பாட வினாப்பத்திரமும், அதற்கான விடைப்பத்திரமும் உதாரணமாகக் காணப்படுகின்றது.

வெறும் பத்து வயதே நிரம்பிய இந்த பச்சிளம் பிள்ளைகளுக்கு பரீட்சை பரீட்சை என்று அழுத்தம் கொடுப்பது மட்டுமல்லாது இவ்வாறு தரக்குறைவான வினாப்பத்திரங்களை வழங்கி அவர்களை உள ரீதியாக பாதிப்படையச் செய்வதால் என்ன ஆனந்தம் கொள்கிறார்களோ தெரியவில்லை.

இந்த கணித பாட வினாப்பத்திரமானது தரவுகளற்ற உருவ அமைப்புக்களையும், க.பொ.த சாதாரண தர கணிதப் பரீட்சையில் கேட்கப்படகூடிய மற்றும் விளக்கமற்ற வினாக்களையும் கொண்டுள்ளதுடன், வினாக்களுக்குத் தொடர்பற்ற விடைப் பத்திரத்தையும் கொண்டு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

(வினாப்பத்திரமும், அதற்கான விடைப்பத்திரமும் இனைக்கப்பட்டுள்ளது.)
இப்பத்திரத்தினைப் பார்க்கும் போது பின்வருவன போன்ற பல கேள்விகள் எழுகின்றன…
1. சிறந்த வினாத் தயாரிப்பதில் திறமையற்ற / ஏனோ தானோ என்ற போக்கில் / தமது புலமையை மாணவர்களிடம் திணிக்கின்ற போக்கா?
2. அதிகாரிகளின் அலட்சியப் போக்கா?
3. தரமற்ற பத்திரங்கள் அச்சிடுவதில் ஊழல்கள் நடைபெற்றிருக்குமா?
4. அறம் அற்று வெறும் சம்பளத்துக்காக ஏதோ செய்து முடித்தால் போதும் என்பவர்களின் செயற்பாடா?
5. இவற்றை கண்காணிக்க கல்விப் பணிப்பாளருக்கு / உதவிக் கல்விப் பணிப்பாளர்களுக்கு நேரம் இல்லையா?
6. இவ்வாறு விரயமாக்கப்படும் பணம் நாட்டுப் பிரஜைகளின் பணமுமல்லவா?

எனவே எதிர்வரும் காலங்களில் இவ்வாறான தரக் குறைவான வினாப்பத்திரங்களை அச்சிட்டு விநியோகிக்காமல் சிறந்த வினாப்பத்திரங்களை அச்சிட்டு வெளியிட உரிய அதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டும் என பாதிக்கப்படும் ஒவ்வொருவர் சார்பிலும் கேட்டுக்கொள்கின்றோம்.

– பெற்றோர் –

1

2

3

6

7

Share This:
Loading...

Related Posts

Loading...