படகு மூலம் அவுஸ்ரேலியா செல்வதற்காக தங்களுடைய சிறுநீரகத்தை விற்பனை செய்யும் ஈழத்தமிழர்கள்..எப்போது முடியும் இவர்களின் அவலம்..?

Share this post:

tha

இந்தியாவில் உள்ள ஈழ தமிழர்கள் ஆஸ்திரேலியாவுக்கு படகில் செல்வதற்காக சிறுநீரகங்களை விற்கின்றனர் என்றுதெரிய வந்து உள்ளது.

கடந்த 03 வருடங்களில் படகு பயணத்துக்கு பணம் செலுத்துவதற்காக ஈழ தமிழர்கள் 500 பேர் வரை சிறுநீரகங்களை விற்று உள்ளனர் என்று தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரஹாசன் தெரிவித்து உள்ளார்.

படகு பயணத்துக்கு தலா 3000 அமெரிக்க டொலர் செலவாகின்றது.

ஆயினும் அகதி முகாம்களில் தங்கி உள்ள எவரும் இவ்விதம் செய்யவில்லை என்றும் வெளியில் தங்கி உள்ளோரே இவ்விதம் செய்கின்றனர் என்றும் இவர் கூறினார்.

இவர்கள் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு இவர்களின் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டன என்றும் குறிப்பிட்டார்.

சட்டவிரோத சிறுநீரக விற்பனை கொழும்பில் களை கட்டுகின்றது. சுமார் 11 வைத்தியர்கள் இம்மோசடி கும்பலுடன் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்றும் தெரிய வந்து உள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...