திருமணம் நடைபெற்ற நாளன்று இரவிலேயே பிரிந்த ஜோடி ..? காரணம் என்ன..?

Share this post:

lo

திருமணம் நடைபெற்ற தினம் இரவிலேயே ஜோடியொன்று பிரிந்த சம்பவமொன்று சவுதியில் இடம்பெற்றுள்ளது. சவுதியின் தமாம் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெண் புகைப்பட கலைஞரொருவர் , தனது மனைவியை திருமண மண்டபத்தில் படம் எடுப்பதனை கணவன் அனுமதிக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

தன்னை படம் எடுப்பதற்கென மனைவி, பெண் புகைப்படக்கலைஞர் குழுவொன்றை அமர்த்தியுள்ளார். எனினும் கணவன் அதற்கு அனுமதி மறுத்துள்ளார்.

படங்கள் சமூகவலைதளங்களில் கசியக்கூடுமென அவர் பயந்த தாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து ஏற்பட்ட மனக்கசப்பே பிரிவிற்கான காரணமென சுட்டிக்காட்டப்படுகின்றது.

Share This:
Loading...

Related Posts

Loading...