அரசாங்கத்தை எச்சரித்து நாளை வர்த்தக சங்கங்கள் கடைகளை அடைத்து போராட்டம்..!

Share this post:

ja

அரசாங்கம் விதித்துள்ள வற் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் நாளை நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.

இதன்படி, நாளை முதல் கடைகளை மூடி வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வர்த்தக சங்கங்கள் தெரிவித்துள்ளன.

வர்த்தக சங்கங்களில் பதிவு செய்துள்ள சகல கடை உரிமையாளர்களும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எந்தவித அறிவித்தலும் இன்றி நிதி அமைச்சர் வற் வரிச் சீர்திருத்தத்தை எதிர்வரும் 11ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

எனவே, வற் வரி சீர்திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக வர்த்தக சங்கங்கள் நாடு தழுவிய எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளன.

Share This:
Loading...

Related Posts

Loading...