மேலதிக வகுப்பிற்கு சென்ற 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகப்படுத்திய ஆசிரியர் கைது…

Share this post:

kula

அனுராதபுரம் நகரில் மேலதிக வகுப்பிற்கு சென்ற 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் நகரின் பிரதான பாடசாலையொன்றில் பணிபுரியும் 44 வயதுடைய குறித்த ஆசிரியர் தன்னை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குறித்த சிறுமி அனுராதபுரம் காவல்நிலையத்தின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பிரிவில் முறைபாடு செய்துள்ளார்.

குறித்த சந்தேக நபருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாக காவற்துறை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவர் இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...