இலங்கையில் தடம் பதிக்கும் உலகின் மிகப் பெரிய வங்கி …!

Share this post:

bank

உலகின் மிகப் பெரிய வங்கிகளில் ஐந்தாவது இடத்தில் உள்ள சீன வங்கி (Bank of China) சிறிலங்காவில் கால்பதிக்கவுள்ளது. சீன வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான தலைமையகம் கொழும்பில் அமைக்கப்படவுள்ளது.

சீனாவிலும், ஏனைய 41 நாடுகளிலும், இந்த வங்கி கிளைகளைக் கொண்டிருக்கிறது. எனினும் தெற்காசியாவில், கொழும்பிலேயே முதலாவது வங்கிக் கிளை அமைக்கப்படவுள்ளது.

இந்த வங்கியை அமைப்பது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கு, விரையில் சீன அதிகாரிகள் குழு கொழும்பு வரவுள்ளதாக, கொழும்பில் உள்ள சீனத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது கொழும்பில் அமைக்கப்படவுள்ள சீன வங்கியின் கிளை, துறைமுக நகரத் திட்டம் நிறைவடைந்த பின்னர், அங்கு மாற்றப்படும்.

சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் சீனாவின் முதலீட்டிலான திட்டங்களுக்கான நிதி இந்த வங்கியின் ஊடாகவே கையாளப்படவுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...