உலகின் மிகவும் நீளமான கால்களைக் கொண்ட பெண் இவர் தான் – இவரைப்பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுங்களன்…!(Photos)

Share this post:

உலகின் மிக நீளமான கால்களைக் கொண்ட பெண்ணாக ஸ்வெட்லானா பன்க்ரடோவா விளங்குகிறார்.

இவரின் கால்களின் நீளம் தலா 132 சென்ரிமீற்றர் (4 அடிஇ 3. அங்குலம்) ஆகும்.

ரஷ்யாவில் 1971 ஏப்ரல் 29 ஆம் திகதி பிறந்தவர் ஸ்வெட்லானா பன்க்ரடோவா.

அவர் உலகின் மிக நீளமான கால்களைக் கொண்ட பெண் என 2003 ஜூலை மாதம் கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்கள் உறுதிப்படுத்தினர்.

இப்போதும் அவரே உலகின் மிக நீளமான கால்களைக் கொண்ட பெண்ணாக விளங்குகிறார்.

எவ்வாறெனினும், 45 வயதான ஸ்வெட்லானா உலகின் மிக உயரமான பெண் அல்லர் என்பது குறிப்பிடத்தக்கது.

இடுப்புக்கு மேல் அவரின் உடற்பகுதி சாதாரண அளவிலேயே உள்ளது. இதனால், அவர் 195 சென்ரிமீற்றர், அதாவது 6 அடி 5 அங்குல உயரமானவராகவே உள்ளார்.

உலகின் மிக நீளமான பெண்ணாக கின்னஸ் சாதனை நூலில் பதிவுசெய்யப்பட்டவர் சீனாவில் வசித்த யாவோ டெஃபென் ஆவார். இவர் 8 அடி 7 அங்குல உயரமானவர். 2012 ஆம் ஆண்டு தனது 40 ஆவது வயதில் அவர் இறந்தார்.

gurt1

girl2

Share This:
Loading...

Related Posts

Loading...