மீண்டும் ஒரு சோகம் – தூங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்..!

Share this post:

child

உத்தரப்பிரதேசத்தில் தனது பெற்றொர்களுடன் தூங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை மர்ம நபர்கள் பலாத்காரம் செய்யத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.யில் மீண்டும் பயங்கரம்: தூங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமி பலாத்காரம்
லக்னோ:

துப்பாக்கி முனையில் தாய் மற்றும் மகள், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், உத்தரப்பிரதேசத்தின் ஹபூர் மாவட்டத்தில், 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக காவல்துறை தெரிவித்துள்ள தகவலில் ’சிறுமி தனது பெற்றோருடன் வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 1.30 மணியளவில், மழை காரணமாக பெற்றோர்கள் வீட்டிற்குள் செல்ல எழுந்த போது சிறுமியை காணவில்லை.

இதனையடுத்து சிறுமியை அவர்களும், உறவினர்களும் தேடியதில், அருகில் உள்ள சிறுமி நிர்வாண நிலையில் மயங்கி கிடந்துள்ளார். . உடனடியாக சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக மீரட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என ஹபூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த சிலநாட்களுக்கு முன், புலந்த்ஷர் தேசிய நெடுஞ்சாலையில், தாய் மற்றும் மகளை காரில் இருந்து கடத்தி சென்று கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Share This:
Loading...

Related Posts

Loading...