மஹிந்தவின் குடியுரிமையை பறிக்க முயற்சிக்கிறாரா ரணில்..?அதிர்ச்சியில் ராஜபக்ஷ குடும்பம்…

Share this post:

mahi

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை பறிக்க ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான இரகசிய கூட்டம் ஒன்று ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது மஹிந்த ஆட்சிக்காலத்தில் மல்வத்தை பீடத்தில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக, விசாரணை செய்ய ஆணைக்குழு ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மல்வத்தை பீடத்தில் பிளவை ஏற்படுத்துவதில் தொடர்புடைய அனைவரையும் விசாரணை செய்யும் அதிகாரம் இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்படும்.

இந்த ஆணைக்குழு தனது பரிந்துரைகளை ஐனாதிபதி மைத்திரினால சிறிசேனவிடம் கையளிக்கும். இந்த விசாரணையில் குற்றவாளியாக காணப்படுவோரின் குடியுரிமை பறிக்கப்படும் என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று நடந்த அமைச்சர்களின் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மல்வத்தை பீடத்தில் பிளவுகளை ஏற்படுத்த மஹிந்த முயற்சித்தார் என்ற தகவல் தனக்கு கிடைத்ததாகவும், அதுகுறித்த சாட்சியத்தை தனிப்பட்ட முறையில் சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக அளிப்பேன் என்றும் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ரம்பக்கணவில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மல்வத்தை பீடத்தை பிளவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுபற்றி அதிபர் ஆணைக்குழு விசாரணை நடத்தும் என்று கூறியிருந்தார். மகாசங்கத்தைப் பிளவுபடுத்தும் முயற்சிகளைத் தடுப்பது தமது அரசாங்கத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்று என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை அரசியல் காரணங்களுக்காக உலகின் முதல் பெண் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை பறித்த ஐக்கிய தேசிய கட்சி இப்போது மஹிந்தவின் குடியுரிமையைப் பறிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...