ரஜினி,கமல்,அஜித்,விஜய்-ன் அடுத்த படங்கள் எப்போ ரிலீஸ் ?

Share this post:

RA

பெரிய பட்ஜெட்டில் படம் எடுப்பவர்களின் சாய்ஸ் பெரும்பாலும் பண்டிகை நாட்களாகவே இருக்கின்றன. தற்போது தயாரிப்பில் உள்ள படங்களில் பெரிய பட்ஜெட் படம் என்றால்…. ரஜினி, கமல், விஜய், அஜித் நடிக்கும் படங்கள் மட்டுமே. இந்த அடிப்படையில் இவர்கள் நடிக்கும் படங்கள் எப்போது ரிலீஸ் என்று கேட்டால்…

பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘விஜய் 60’ படத்தை 2017ஆம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார்கள். விஜய் நடித்த போக்கிரி, ஜில்லா போன்ற படங்கள் பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படங்கள் என்ற அடிப்படையில், அந்த சென்டிமென்ட்டை பின்கற்றி இந்தப்படத்தையும் பொங்கலுக்கு வெளியிட உள்ளனராம்.

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை அண்மையில் துவக்கினார்கள். 2017ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.

ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘எந்திரன் 2’ படத்தில் பாலிவுட் ஹீரோ அக்ஷய்குமார் வில்லனாக நடித்திருப்பதால், வட இந்தியாவிலும் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. எனவே வட இந்தியாவிலும் வசூலை அள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே விடுமுறையான 2017ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று ‘எந்திரன் 2’ படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளனர்.

கமல் நடித்து வரும் சபாஷ் நாயுடு தீபாவளிக்கு வெளியாக இருந்தது. கமலுக்கு விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுவிட்டது. எனவே அடுத்த வருடம் பொங்கலுக்குத்தான் சபாஷ் நாயுடு வெளிவருமாம்.

Share This:
Loading...

Recent Posts

Loading...