மஹிந்தவின் கோரிக்கையை நிராகரித்த தென் கொரியா – அதிர்ச்சியில் மகிந்த..!

Share this post:

MAH8I

முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தென் கொரிய விஜயத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த விஜயத்தினை அடுத்து இத்தாலிக்கு மஹிந்த விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் தேசப்பற்று அமைப்புகளின் பிரதிநிதிகளும் பலர் இணைந்து கொள்ளவுள்ளனர்.

சிங்கள புலம்பெயர்ந்தோர் அமைப்பொன்றை ஏற்படுத்துவதே மஹிந்தவின் இத்தாலி விஜயத்தின் நோக்கம் என தெரிய வருகிறது.

தென் கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மஹிந்த, நீண்ட நாட்களுக்கு அங்கு தங்கியிருப்பார்.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில், இலங்கையில் இருந்து தென்கொரியவுக்கு வழங்கப்பட்ட யானை ஒன்று, அண்மையில் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. இந்நிலையில் அந்த யானை குட்டிக்கு பெயர் வைக்கும் சந்தர்ப்பத்தை தனக்கு வழங்குமாறு மஹிந்த ராஜபக்ச, தென் கொரியா அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த யானையினை மஹிந்த ராஜபக்ச தனிப்பட்ட ரீதியில் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தூதுவராயலம் ஊடாக தென் கொரிய அதிகாரிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய யானையொன்று இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் தென் கொரிய விஜயத்தில் ஈடுபட்டுள்ள மஹிந்த, குறித்த யானை மற்றும் யானை குட்டியை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று மாலை 5 மணியளவில் தென் கொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், அங்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எப்படியிருப்பினும் மஹிந்த ராஜபக்ச தென் கொரிய ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என முன்வைத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சின் இணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...