மனைவி மற்றும் மகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்த நபர்- உருக்கமான கடிதம் சிக்கியது…!

Share this post:

nap

ராஜபாளையத்தில் தொழிலாளி ஒருவர் தனது மனைவி மகளை விஷம் கொடுத்து கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொழிலாளி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் லட்சுமியாபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). இவருக்கும் கல்லுப்பட்டியைச் சேர்ந்த சங்கரேஸ்வரிக்கும் 7 வருடங்களுக்கு முன்புதிருமணம் நடந்தது. இவர்களது ஒரே மகள் தேவதர்ஷினி (வயது 6) தனியார் பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வந்தாள்.சில ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை பார்த்த செந்தில்குமார் தற்போது கூலி வேலை பார்த்து வந்தார்.

தற்போது லட்சுமியாபுரம் பகுதியில் சொந்தவீடு கட்டி வந்ததால், துரைசாமிபுரம் செங்குட்டுவன் தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார்.

கொலை–தற்கொலை
இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து யாரும் வெளிவராத நிலையில் செந்தில்குமாரின் அண்ணன் போத்திராஜ் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது, மூவரும் சடலமாக கிடப்பது தெரிய வந்தது.

போலீசாருக்கு தகவல் தெரிவித்து, இன்ஸ்பெக்டர்கள் பவுல்ஏசுதாஸ், ஜேசு மற்றும் காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் மனைவிக்கும், மகளுக்கும் விஷத்தை கொடுத்து கொன்று விட்டு, செந்தில்குமார் தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

உருக்கமான கடிதம்
3 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன தெற்கு காவல்நிலையத்தினர் ஆய்வு செய்ததில், செந்தில்குமார் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.

அதில் 2 ஆண்டுகளாக தான் செய்த ரியல்எஸ்டேட் தொழில் மிகவும் நலிவடைந்து உள்ளதால், மனம் வேதனை அடைந்து ஒரு வருடங்களாக வேலை செய்யாமல் இருந்து வந்தேன். எனக்கு எந்த கடன் பாக்கியும் இல்லை. ஆனால் நான் முப்பிடாதி என்பவருக்கு கொடுத்த 2 லட்சம் பணத்தில் 1 லட்சம் வாங்கி விட்டேன். மீதி 1 லட்சம் பணத்தையும், பீரோவில் உள்ள தங்கநகைகளையும் தனது மாமா வசம் ஒப்படைக்க வேண்டும் எனவும்,இந்த முடிவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும் தெரிவித்து உள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...