பியர் இறக்குமதிக்கு வரிச் சலுகையா…? வேண்டாம்…!

Share this post:

beer

பியர் இறக்குமதிக்கான வரிச் சலுகையை வழங்காது, அத்தியாவசிய பொருட்களின் வரியை நீக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக முன்னணி பியர் உற்பத்தி நிறுவனமொன்றின் பியர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் லாவோஸ் மற்றும் கம்போடியாவிலிருந்து பியர் இறக்குமதி செய்ய 75 வீத வரிச் சலுகையை அரசாங்கம் வழங்க உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் பியருக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடுமெனக் கருதி அரசாங்கம் இவ்வாறு வரிச் சலுகை வழங்குவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

எனினும், பியர் இறக்குமதிக்கு வரிச் சலுகை வழங்காது, அத்தியாவசியப் பொருள் இறக்குமதிக்கு வரிச் சலுகை வழங்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்சா கோரியுள்ளார்.

பியர் நாட்டின் அத்தியாவசிய உணவுப்பொருள் கிடையாது எனவும், இதனால் தொற்றா நோய்கள் அதிகரிப்பதாகவும் வைத்தியர் நவீன் டி சொய்சா மேலும் தெரிவித்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...