இலங்கையில் மனைவியை தீயிட்டு கொலை செய்த கணவன்..!

Share this post:

kola

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவுப் பகுதியில் கணவனால் மனைவி தீ வைக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், நேற்று வெள்ளிக்கிழமை (05) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சம்மாந்தறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

காரைதீவு வெட்டடுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண்ணான மொறிஸ் மெரினா (வயது 31) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் இப்பெண்ணின் கணவரான குகதாசன் (வயது 32) என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் திருமணம் முடித்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தக்கமே இக்கொலைக்குக் காரணம் எனத் தெரிவித்த சம்மாந்தறைப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபரை, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...