இலங்கை இந்தியாவிற்கு இடையில் அமைக்கப்படவுள்ள பாலத்தால் அச்சத்தில் சிங்கள மக்கள்..!

Share this post:

paalam

இலங்கை இந்திய பாலம் நிர்மாணிக்கப்படுவது தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டியதோடு இது தொடர்பில் ஒரு நாள் விவாதத்திற்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென வலியுறுத்தும் “மஹிந்த அணி” ஆதரவு எம்.பி. வாசுதேவ நாணயக்கார எதிர்காலத்தில் “தமிழ்நாட்டுக்கு” அடிமைப்பட வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற அச்சம் சிங்கள மத்தியில் தலைதூக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் எதுவும் நிர்மாணிக்கப்படமாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தியப் பாராளுமன்றத்தில் பாலம் அமைக்கப்படுவது தொடர்பில் பேசியது தனக்கு தெரியாது என்றும் பிரதமர் தெரிவித்தார். ஆனால் இன்று இந்தோனேஷியாவில் வைத்து அமைச்சர் கபீர் ஹாசிம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் நிர்மாணிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இது சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று சமஷ்டி முறைமையை வலியுறுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் வடக்கு தமிழ் மக்களும் அச்சம் கொண்டுள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...