மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் மரணம்… யாழில் சோகம்..!

Share this post:

mqana

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் மரணமடைந்த சோக சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மனைவி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பயனளிக்காத நிலையில் கடந்த 3 ஆம் திகதி மரணமடைந்தார்.

இச் சம்பவத்தால் கடுமையான சோகத்தில் இருந்த கணவர், மனைவியின் உடலைப் பார்த்தவுடன் மயங்கி வீழ்ந்து அதே இடத்தில் மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்தவர்கள் திருநெல்வேலியை சேர்ந்த பொன்னம்பலம் பரமேஸ்வரி தம்பதிகளாவார்.

இருவரின் மரணங்களும் பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்களையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...