வீதியை கடக்க முற்பட்ட முதலைக்கு நடந்த சோகம்..!

Share this post:

mu

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தொன்றின் போது முதலையொன்று உயிரிழந்துள்ளது.

மட்டக்களப்பு வாவியில் இருந்து வீதியை கடக்க முற்பட்ட முதலையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த முதலை சுமார் ஆறு அரை அடி நீளமுடையது எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். வறட்சியான காலப்பகுதியில் குளங்களில் வாழும் முதலைகள் நீர் நிலைகளைத் தேடிவருகின்றன.

இதன் போது இவ்வாறான அசம்பாவிதங்களில் சிக்கிக்கொள்வதுடன் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ள சம்பவங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...