கள்ளக் காதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்று பிளாஸ்டிக் பையில் அடைத்து தெருவில் வீசிய கணவன்..!

Share this post:

Capture

டெல்லியில் உள்ள லட்சுமிநகர் பகுதியை சேர்ந்தவர் பெரோஸ்கான். இவரது மனைவி கலிமா. இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் சுமன் என்ற பெண்ணுடன் பெரோஸ்கானுக்கு காதல் ஏற்பட்டது. அந்த பெண்ணிற்கு அதே பகுதியில் வாடகை வீடு எடுத்து கொடுத்து தங்க வைத்தார். அங்கு இருவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தனர்.

அந்த பெண்ணை விட்டு விலகி வரும்படி மனைவி கலிமா, பெரோஸ்கானிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். ஆனால் அதை அவர் கண்டுகொள்ளவில்லை.

இதனால் கோபம் அடைந்த கலிமா, சுமன் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று சண்டை போட்டார். அப்போது, பெரோஸ்கானும், சுமனும் சேர்ந்து கலிமாவை அடித்து கொன்றனர்.

பின்னர் படுக்கைக்கு கீழே உள்ள பெட்டியில் பிணத்தை 2 நாட்களாக அடைத்து வைத்திருந்தனர். பிணம் அழுக தொடங்கியதால் அதை பிளாஸ்டிக் பையில் கட்டி தெருவில் கொண்டுவந்து போட்டனர்.

இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. அவர்கள் விசாரணை நடத்தியதில் பெரோஸ்கானும், சுமனும் சேர்ந்து கலிமாவை கொலை செய்திருப்பதை கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...