உயர்தர பரீட்சையின் போது கடமையில் இருந்த உதவி மேற்பார்வையாளர் திடீர் மரணம் – நடந்தது என்ன..?

Share this post:

uyar

நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சைகளின் உதவி மேற்பார்வையாளர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று பண்டாரவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், 52 வயதான ஒருவரே மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டாரவளை புனித ஜோசப் வித்தியாலயத்தில் கடமையிலிருந்த ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் பண்டாரவளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் மாணவர்களின் பரீட்சைகளுக்கு எவ்வித தடைகளும் ஏற்படவில்லை என்றும் பரீட்சைகளின் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...