மரணத்திலும் இணைபிரியாத தோழிகள்: தமிழ் பெண்கள் இருவரின் சோகக் கதை!

Share this post:

fri

தோழிகள் இருவர் தற்கொலை செய்துகொண்ட செய்தியொன்று பதுளை , மடுல்சீமை பிரதேசத்தில் பதிவாகியிருந்தது.

இவ்வாறு தீவைத்து தற்கொலை செய்துகொண்ட இருவரும் சிறுவயதில் இருந்து தோழிகளாக இருந்தவர் என தெரியவருகின்றது.

செல்வகுமார் காஞ்சனா மற்றும் பரமேஸ்வரன் அருள்செல்வி என்ற 17 வயதான யுவதிகளே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டிருந்தனர்.

காஞ்சனா , அதே பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை காத லித்து வந்துள்ளார். இதனை அறிந்த அவரது தந்தை கடந்த 30 ஆம் திகதி அவரைக் கண்டித்துள்ளார்.

இதனை அடுத்து மனமுடைந்து போன அவர் , தனது நண்பியுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இச்சம்பவத்தின் போது ஒரு பெண் வீட்டிலேயே உயிரிழந்திருந்த துடன் மற்றையவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இருவரும் , ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில் கல்வி பயின்றுள்ளதுடன், சிறுவயது முதலே இணைபிரியாத நண்பிகளாக இருந்துள்ளனர்.

மரணத்தில் கூட இருவரும் ஒன்றாக உயிரிழந்தமையானது பிரதேசவாசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...