தாய் மற்றும் மகளை காரில் வைத்து 7 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பாலியல் பலாத்காரம்…

Share this post:

ko

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு புலந்த்ஷர் என்ற இடத்தில் காரில் சென்ற தாய்- மகளை 7 பேர் கும்பல் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

இந்த சம்பவத்தின் சோகம் மறையும் முன்பு பரேலி என்ற இடத்தில் சாலையில் நடந்து சென்ற ஆசிரியை காரில் கடத்திச் செல்லப்பட்டு 2 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த இரு சம்பவங்களிலும் குற்றவாளிகளை தேடும் பணியில் பொலிசார் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆக்ராவில் 2 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. முதலாவது சம்பவம் ஆக்ரா பிரகாஷ் நகரில் நடந்தது. இங்கு தனது சகோதரருடன் வசித்து வந்த 19 வயது ஊனமுற்ற பெண்ணை அவரது உறவினரும் மற்றொரு வசதி படைத்தவரும் வீடு புகுந்து கற்பழித்தனர். இருவரும் அளவுக்கு அதிகமான போதையில் இருந்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆக்ரா அருகே நவடா என்ற இடத்தில் விதவைப் பெண் கற்பழிக்கப்பட்டார். இறந்துபோன அவரது கணவரின் நண்பகளால் அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே பரேலியில் ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பள்ளியில் படிக்கும் 50 மாணவிகள் தங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் கேட்டு பொலிசில் மனு கொடுத்துள்ளனர். அதுவரை பள்ளி – கல்லூரிகளுக்கு செல்ல மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் தொடரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்களால் முதல்- மந்திரி அகிலேஷ் யாதவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...