யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் சிங்கள மாணவர்களின் பெற்றோருடன் ஜனாதிபதி சந்திப்பு..!

Share this post:

mai

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றும் சிங்கள மாணவர்களின் பெற்றோர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர்.

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இந்தச் சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இதில் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கடந்த ஜுலை மாதம் 16ம் திகதி யாழ்.பல்கலைக்கழகத்தினுள் நடைபெற்ற மோதல்களின் பின்னர் மருத்துவ பீட சிங்கள மாணவர்கள் இதுவரை பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளுக்குத் திரும்பவில்லை. இவர்களின் பெற்றோர் இதற்கு முன்னதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியிருந்த போதிலும் இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை.

இதற்கிடையே இணைந்த விஞ்ஞானப் பிரிவு மற்றும் முகாமைத்துவ பீடங்களின் சிங்கள மாணவர்கள் வழமை போன்று தமது கற்றல் நடவடிக்கைகளைத் தொடர ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...