“நல்ல நண்பன் வேண்டுமென்று..” கண் கலங்க வைத்த நாயின் நட்பு! (Video)

Share this post:

dog

ஒரு நாளில் பல்வேறு வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வந்தாலும் ஒரு சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும், சிந்திக்கவைக்கும் மற்றும் சில வீடியோக்கள் கண் கலங்க வைக்கும் அப்படி ஒரு வீடியோ பற்றிய செய்தி இது.

சிறிது நாட்களுக்கு முன்னர் இதே சமூகவலைதளத்தில், நாய்களை கொடுமைப்படுத்தும் சில காட்சிகளை பார்த்து நம் மனம் அதிர்ந்தது உண்மை என்றால் இது அவர்களுக்கான வீடியோ.. இல்லாதவர்களுக்கு நாய் என்ற பிராணியை புரிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பு.

இந்த தலைப்பு உருவாக காரணம் இன்று சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் நாயின் நட்பு வீடியோ. தெருவில் அடிப்பட்டுள்ள நாய்க்கு சிகிச்சை அளிக்க முன் வந்த ஒருவர் நாயை பரிசோதனை செய்துவிட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது அதனை பார்த்து பரிதவிக்கும் இன்னொரு நாய் பின்னர் எடுத்துச் செல்லும் வாகனத்தை பின் தொடர்வது காண்பவர்களை நெகிழச் செய்கிறது.

இதனை பார்த்த சிகிச்சையாளர்கள் பரிதவித்த அந்த நாயையும் அதே வாகனத்தில் ஏற்றி செல்கிறார்கள். இந்த வீடியோவை பார்த்து நெகிழ்ந்து அனைவரும் பகிர்வதுடன்..”நட்புக்கு எடுத்துக்காட்டு” “மனிதனின் உண்மையான நண்பன்” “அன்பே உலகம்” என கமெண்ட் செய்து வருகின்றனர்

Share This:
Loading...

Related Posts

Loading...