நிம்மதியான உறக்கம் இல்லையா…? இந்த வீட்டு வைத்தியத்தை கொஞ்சம் முயற்சித்த்துப் பாருங்க..!

Share this post:

nithth

இன்றைய காலக்கட்டத்தில் விலை அதிகமான பொருட்களை கூட ஈ.எம்.ஐ வசதிக்கொண்டு வாங்கிவிட முடியும். ஆனால், உலகில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும், அவற்றின் ஆரோக்கியத்திற்கு அவசியமான உறக்கத்தை வாங்கிவிட முடியாது. அதிலும், நிம்மதியான உறக்கம்??

சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வது என்ற ஒரு சொற்றொடர் நாம் அனைவரும் கேள்விப் பட்டிருப்போம். ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி, லேப்டாப் பயன்படுத்தும் அனைவரும் தங்களுக்கு தானே வைத்துக் கொள்வது தான் அது.

சரியாக உறங்காவிடில் நாம் மட்டும் அல்ல, நமது உடல் உறுப்புகளும் கூட சரியாக வேலை செய்ய முடியாது. எனவே, நல்ல உறக்கம் மிகவும் அவசியம். இன்று பலர் மத்தியில் பற்றாக்குறையாக இருப்பது. இந்த நல்ல, நிம்மதியான உறக்கம் தான்.

சில ஆயுர்வேத முறைகளை பின்பற்றினால் அந்த நிம்மதியான உறக்கத்தை கூட எளிமையாக பெற்றுவிடலாம்…

ஆயுர்வேத முறை #1
வெங்காயம், உப்பு இரண்டையும் நீரில் கொதிக்கவைத்து, சூடான வெள்ளை சாப்பாட்டுடன் கலந்து சாப்பிட்டால் நன்கு உறக்கம் வரும்.

ஆயுர்வேத முறை #2
வேப்பிலையை வறுத்து இதமான சூட்டுடன் தலையில் வைத்து தூங்கினால், நிம்மதியாக உறங்கலாம்.

ஆயுர்வேத முறை #3
கசகசாவை முந்திரியுடன் சேர்த்து அரைத்து, பாலில் கலந்து காய்ச்சி, கொஞ்சம் கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் நன்கு தூக்கம் வரும்.

ஆயுர்வேத முறை #4
வெங்காயத்தை நசுக்கி, அந்த வெங்காய சாற்றை ஒரு சொட்டு கண்ணில் விட்டால் நன்கு உறக்கம் வரும்.

ஆயுர்வேத முறை #5
சீரகத்தை வறுத்து பொடி செய்து, அதை வாழைப்பழத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நிம்மதியான உறக்கம் பெறலாம்.

Share This:
Loading...

Recent Posts

Loading...