இதுதான் விக்ரமின் இன்னொரு முகம்…!

Share this post:

vikaram

ஏற்கும் கேரக்டருக்காக மெனக்கெடுவதில் விக்ரமை இன்னொரு கமல் என்றெல்லாம் ஒப்பிடத் தேவையில்லை. அந்த விஷயத்தில் விக்ரம் விக்ரம்தான். என்ன, கொஞ்சம் ஓவராகவே மெனக்கெட்டுவிடுவார்.

பத்து எண்றதுக்குள்ள பெரிய அடி வாங்கியதால், அடுத்த படமான இரு முகனில் ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் ஆனந்த் சங்கரோடு இணைந்து இழைத்து வருகிறாராம்.

இந்தப் படத்தில் இருவேடங்களில் நடிக்கும் விக்ரமுக்கு நயன்தாரா, நித்யா மேனன் என இரு நாயகிகள். நீண்ட இடைவேளைக்குப் பின் விக்ரம் இரட்டை வேடமேற்றிருக்கிறார்.

இசை வெளியீடு
படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மலையாள நடிகர் நிவின்பாலி, சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், லிசி, தம்பி ராமையா, இயக்குனர் ஹரி, மதன் கார்க்கி, ஒளிப்பதிவாளர் ராஜசேகர் உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

அக்டோபரில்
இதனால் நயன்தாரா-விக்ரம் ஜோடியை விட விக்ரமின் திருநங்கை அவதாரம்தான் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. ‘இருமுகன்’ படத்தை அக்டோபர் 2-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ். இவர்தான் விஜய் நடித்த புலி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்.

ட்ரைலர்
‘இருமுகன்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது. படத்தில் அகிலன் என்ற உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

திருநங்கை லவ்
தற்போது லவ் என்ற திருநங்கையாகவும் இப்படத்தில் விக்ரம் நடித்திருக்கிறார். படத்தின் பாடல்களை விட விக்ரமின் திருநங்கை அவதாரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

அக்டோபரில்
இதனால் நயன்தாரா-விக்ரம் ஜோடியை விட விக்ரமின் திருநங்கை அவதாரம்தான் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. ‘இருமுகன்’ படத்தை அக்டோபர் 2-ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ். இவர்தான் விஜய் நடித்த புலி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்.

Share This:
Loading...

Recent Posts

Loading...