ஒரு இளஞனைக் காதலித்த இரு சிறுமிகள் தீக்குளிப்பு! – இலங்கையில் நடந்த சோகம்..!

Share this post:

ilaninan

இரண்டு உறவுக்கார சிறுமிகள் பதுளை – மடுல்சீமை – ரோபேரிவத்தை பகுதியில் உடலுக்கு தீ வைத்து கொண்டதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அத்துடன் 17 வயதான இரண்டு சிறுமிகளே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

இவர்களில் ஒருவர் இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பை பேணியுள்ளார். இந்த விடயம் அவரது தந்தைக்கு தெரியவர அவர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவர்கள் தீக்குளிக்க காரணம் இது தான் என தெரியவந்துள்ளதோடு, இதன்போது கடுமையான தீக்காயங்களுக்குள்ளான சிறுமி நேற்று வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

மற்றையவர் இன்று காலை மரணமடைந்ததாக தெரியவந்துள்ளது. இவர்களது சடலங்களின் பாகங்கள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மடுல்சீமை பொலிசார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Share This:
Loading...

Related Posts

Loading...