திருமணத்திற்கு முன் கசமுசா: ஜோடிகளுக்கு கிடைத்த அதிரடி தண்டனை..!(Photos)

Share this post:

இந்தோனேஷியாவில் திருமணத்திற்கு முன்னர் டேட்டிங் சென்ற திருமணமாகாத ஜோடிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் கசையடி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் உள்ள Aceh மாகாணம், தொன்றுதொட்டு இஸ்லாமிய முறைகளை பின்பற்றி வரும் மாகாணம் ஆகும்.

இந்த மாகாணத்தில், ஓரினச்சேர்க்கை உறவு, திருமணத்திற்கு முன்னர் உறவு கொள்வது, காதலர்களாக வெளியில் சுற்றுவது என்பது மிகவும் தவறானது மட்டுமல்லாமல் அதனை இஸ்லாமிய சட்டமும் ஏற்றுக்கொள்ளாத ஒன்று, அதனையும் மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், சட்டத்தின் தண்டனையில் இருந்து இவர்கள் தப்பவே முடியாது.

இந்நிலையில், இந்த மாகாணத்தை சேர்ந்த ஜோடிகள், திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் இருவரும் சேர்ந்து ஜாலியாக டேட்டிங் சென்றுள்ளனர்.

இவர்களது ரகசிய டேட்டிங் வெளியில் கசிந்ததையடுத்து, Al Furqon மசூதி முன்னிலையில் வைத்து இவர்களுக்கு கசையடி கொடுக்கப்பட்டுள்ளது, முதலில் அப்பெண்ணை, இரண்டு பெண்கள் சேர்ந்து அழைத்து வந்து மசூதியின் முன்னிலையில் உள்ள மேடையில் மண்டியிடவைக்கின்றனர்.

அதன்பின்னர், நபர் ஒருவர் வந்து தான் வைத்திருக்கும் பிரம்பால், அப்பெண்ணுக்கு கசையடி கொடுக்கிறார், இதனால் வலி தாங்க முடியாத அப்பெண் கதறி அழுகிறார். இதே போன்று அந்த நபரையும் வேறொரு இடத்தில் கட்டிவைத்து அடித்துள்ளனர்.

thi4

thi3

thi2

Share This:
Loading...

Recent Posts

Loading...