பாராளுமன்றத்தில் தீக்குளிப்பேன் என பாராளுமன்றத்துக்கு பெற்றோலை எடுத்துச் சென்ற பாராளுமன்ற உறுப்பினருக்கு ரணில் கொடுத்த அதிர்ச்சி??

Share this post:

suresh

தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் பாராளுமன்ற்திற்குள்ளேயே பெற்றோலை உடலில் இட்டு தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக பரபரப்பை ஏற்படுத்திய பதுளை பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பரிசாக இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளர் பதவியை வழங்கியுள்ளார்.

இதன் மூலம் இ.தொ.க உடன் கூட்டு ஒப்பந்தத்தில் தோட்ட தொழிலாளர்களின் எதிர்கால சம்பள உயர்வை பெற்று கொடுக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடப்போவது அக்கட்சியின் சார்பாக வடிவேல் சுரேஷ் ஆகும்.

எனவே தோட்ட தொழிலாளர்களுக்கு எதிர்காலத்தில் சம்பள உயர்விற்காக வடிவேல் சுரேஷ் கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பம் இடப்போவது ஆயிரம் ரூபாய் உயர்விற்கா அல்லது 720ரூபாய்க்கா? என்பதனை பொருத்திருந்து பார்ப்போம் என மக்கள் கூறுகின்றார்கள்.

Share This:
Loading...

Related Posts

Loading...