டிக்கட் எடுக்காத பயணியை ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகர்..!

Share this post:

rain

இந்தியாவில் பீகாரில் டிக்கெட் பரிசோதனையின் போது குறிப்பிட்ட டிக்கெட் எடுக்காததால் பாசோதகர் பயணியை ஓடும் ரெயிலில் தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லியில் வேலை பார்த்து வரும் தொழிலாளி அனில் நோனியா. 41 வயதான இவர் நேற்று முன்தினம் இரவு புதுடெல்லி-கவுகாத்தி விரைவு ரெயிலில் முன்பதிவு பெட்டியில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பயணிகளின் டிக்கெட்டுகளை பரிசோதனை செய்த பரிசோதகர், அனிலிடம் பொது பெட்டியில் செல்வதற்கான டிக்கெட் இருந்ததால் ஆத்திரமடைந்தார். இருவர்க்கும் இடையே இந்த விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் மிகவும் கோபமடைந்த பரிசோதகர் அவரை ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் ரெயிலை நிறுத்தியுள்ளனர். பின்னர் படுகாயம் அடைந்த அனில் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக டிக்கெட் பரிசோதகர் மீது பொது பெட்டியில் வந்த அனில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், டெல்லியில் இருந்து பொது பெட்டியில் தான் அனில் பயணம் செய்து வந்தார்.

பீகார் மாநிலம் கத்திகார் ரெயில் நிலையத்தில் தண்ணீர் பிடிக்க அவர் இறங்கிய போது ரெயில் புறப்பட்டு விட்டது. இதனால் அவசரத்தில் அவர் முன்பதிவு பெட்டியில் ஏறினார் என்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...