வவுனியா பேரூந்து நிலையத்திற்கு மதுபோதையில் அட்டகாசம் செய்யும் குடிமகன்கள் – பயணிகள் பெரும் சிரமம்..!

Share this post:

vav

வவுனியா பிரதான பேரூந்து நிலையத்திற்கு இரவு நேரங்களில் மதுபோதையில் வருவோரால் பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் மது போதையில் வவுனியா நகரப்பகுதியில் உள்ள பிரதான பேரூந்து நிலையத்திற்கு வரும் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் அங்கு பயணங்களை மேற்கொள்வதற்காக நிற்கும் பயணிகளுடன் தகாத வார்த்தைகளால் பேசி முரண்படுவதுடன், மது போதையில் இருவர் அல்லது குழுவாக வருகின்ற போது தமக்குள்ளும் முரண்பட்டு தகாத வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர்.

இதனால் இரவு நேரங்களில் பேரூந்துகளில் ஏறுவதற்காக வருகின்ற பெண்கள், சிறுவர்கள் மற்றும் பல குடும்பங்கள் முகம் சுழித்துக் கொள்வதுடன் அசெளகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

இச்சம்பவங்கள் இடம்பெறுகின்ற போது அப்பகுதியில் உள்ள பேரூந்து சாரதிகள், நடத்துனர்களால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்படுகின்ற போதும் பொலிசார் உடனடியாக வருவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Share This:
Loading...

Related Posts

Loading...