விஜய், அமலா பால் விவாகரத்திற்கு காரணம் என்ன ..? வெளியான புதிய காரணம்….???

Share this post:

amla

இயக்குநர் விஜய் – அமலா பால் ஜோடி விவாகரத்து முடிவிற்கு வரக் காரணம், விஜயின் குடும்பத்தார் தான் எனப் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தெய்வத் திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய போது, நடிகை அமலாபால் – இயக்குநர் விஜய் இரண்டு பேருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஜூன் 12-ந் தேதி, சென்னையில் திருமணம் நடந்தது.

திருமணத்துக்குப்பின் அமலாபால், கணவருடன் சென்னையில் குடியேறினார். சென்னை அடையார் போட் கிளப்பில் உள்ள ஒரு பங்களாவில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தினார்கள்.

திருமணத்திற்கு முன் ஒப்பந்தமான சில படங்களின் படப்பிடிப்பை மட்டும் முடித்துக் கொடுத்த அமலாபால், சிலகாலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்னர் மீண்டும் நல்ல பட வாய்ப்புகள் கிடைத்ததால், பசங்க 2, அம்மா கணக்கு உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தார்.

ஆனால், திருமணத்திற்குப் பின் மீண்டும் அமலாபால் நடிப்பது விஜய் மற்றும் அவரது குடும்பத்தாருக்குப் பிடிக்கவில்லை எனக் கூறப்பட்டது. அடுத்தடுத்து புதிய படங்களில் அவர் ஒப்பந்தமானது, அவர்களுக்கிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது.

இதனால் விரைவில் அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாகத் தகவல்கள் வெளியானது. ஆனால், இது குறித்து சம்பந்தப்பட்ட இருவரும் வாய் திறக்கவில்லை. ஒருவர் மீது மற்றொருவர் புகார் பத்திரம் வாசிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜயின் தந்தை அழகப்பன் அளித்த பேட்டியில், ‘அமலா யாருடைய பேச்சையும் கேட்பதில்லை. அதனால் தான் இந்த விவாகரத்து முடிவு’ எனக் குற்றம் சாட்டினார். அதற்கும் அமலாபால் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் விஜய் மற்றும் அமலாபாலின் நெருங்கிய உறவினர்கள் கூறியதாக வெளியான தகவலில், “அமலா பால் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க விஜய் உறுதுணையாகவே இருந்தார். ஆனால், இது அவரது பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. தொடர்ந்து அமலாபால் நடிப்பதை அவர் விமர்சித்து வந்தனர். இதனால் பெற்றோரை எதிர்க்க முடியாத நிலையில் விஜய் மவுனம் காத்து வந்தார். இதனாலேயே இருவரும் சுமூகமாகப் பிரிவது என முடிவெடுத்தனர்” எனத் தெரிவித்துள்ளனர்.

Share This:
Loading...

Recent Posts

Loading...