காதலிக்கும்படி கேட்டு இளம்பெண்ணை கட்டிப்பிடித்து தீக்குளித்த இளைஞன்..!

Share this post:

thee

தானும் தீ குளித்து தன்னை காதலிக்க மறுத்த பெண்ணையும் கட்டிப்பிடித்த சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட இளம் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடலில் 85 சதவீதம் அளவிற்கு தீ காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர், விழுப்புரம் அருகே உள்ள வி.பாளையத்தை சேர்ந்த நவீனாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இதுபற்றி தெரியவந்தபோது, நவீனாவும், அவரது பெற்றோரும் செந்திலை கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று நவீனாவின் வீட்டிற்கு வந்த செந்தில், திடீரென தன் உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீயிட்டுக் கொண்டு, நவீனாவையும் கட்டிப்பிடித்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த செந்திலையும், நவீனாவையும் மீட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில் சிகிச்சை பலனின்றி செந்தில் உயிரிழந்தார். 85 சதவீத தீக்காயங்களுடன் நவீனா தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Share This:
Loading...

Related Posts

Loading...