தாய்ப்பால் அருந்திய பெண் குழந்தை மூச்சுத்திணறி பலி – யாழில் சோகம்…

Share this post:

BGB8YK_2290302b

தாய்ப்பால் அருந்திய இரண்டரை மாதப் பெண் குழந்தை மூச்சுத்திணறி நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளதாக யாழ். கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். திருநெல்வேலி – பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த சிவதாசன் கிசானா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

காலை 7 மணிக்கு குழந்தைக்கு பால் கொடுத்த தாய், காலை உணவை சமைத்து முடித்து விட்டு, 9.30 மணிளவில் குழந்தையை தூக்கியுள்ளார். இதன்போது, குழந்தை எவ்வித அசைவும் இன்றி உடல் குளிர்வடைந்து இருந்தத்தை கண்ட அவர், உடனடியாக குழந்தையை யாழ். போதான வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றுள்ளார்.

எனினும் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக, வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மரண விசாரணைகளை, திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...