கணவனை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த மனைவி : இலங்கையில் பயங்கரம்…

Share this post:

mur

அம்பாறை தம்பிலுவில் பிரதேசத்தில் கணவனை கோடரியால் வெட்டிக் கொலை செய்த மனைவியை, திருக்கோவில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) இரவு நடைபெற்ற இச் சம்பவத்தில், திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள தம்பிலுவில்; 2 பிரிவு ஆலையடி வீதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய தங்கவடிவேல் பார்த்தீபன் என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே, இச் சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...