17 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சாதித்த இலங்கை அணி

Share this post:

aus

இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய அணியை தோற்கடித்து முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 106 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை கிரிக்கட் வரலாற்றில் அவுஸ்திரேலிய அணியை தோற்கடித்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் 1999 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற தொடரில் அவுஸ்திரேலிய அணி தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 34.2 ஓவர்களுக்கு 117 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது இலங்கை அணி. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணி 353 ஓட்டங்களை பெற்றது. பின்னர் 268 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 161 ஓட்டங்களை மாத்திரமே பெற்று அணைத்து விக்கெட்டுக்களை இழந்தது. அதன்படி முதலாவது போட்டியில் இலங்கை அணி 106 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Recent Posts

Loading...