யாழில் விபத்து வெளிநாட்டு பெண் படுகாயம்

Share this post:

yael

யாழ்ப்பாணம் ஆரியகுளச் சந்திப்பகுதியல் இடம்பெற்ற வீதி விபத்தில் வெளி நாட்டு பிரஜை ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து நேற்றுபகல் இடம்பெற்றது.

ஸ்ரான்லி வீதியால் நடந்து சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் மீது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.

இதில் சுற்றுலா பயணியான பெண்ணிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து இவர் உடனடியாக முச்சக்கரவண்டியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...