கணவனின் பிரவுத் துயரை தாங்க முடியாது அதிர்ச்சியில் மனைவி, இரு மகள்கள் மற்றும் மகன் ரெயில் முன் குதித்த திடுக்கிடும் காட்சிகள்…

Share this post:

sus

இந்தியாவில் தெலுங்கானா மாநிலத்தில் குடும்ப தலைவர் ஒருவர் உடல் நல குறைவினால் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது மனைவி, இரு மகள்கள் மற்றும் மகன் ஆகியோர் ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர்.

தெலுங்கானாவின் வாரங்கல் பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணா (வயது 51). இவர் நீர்பாசன துறையில் மேலாண் இயக்குநர் பதவி வகித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை ஐதராபாத் நோக்கி காரில் வந்து கொண்டிருந்த அவர் உடல் நல குறைவினால் மரணமடைந்துள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவரது மனைவி, இரு மகள்கள் மற்றும் மகன் ஆகியோர் ஓடும் ரெயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் மீரா (வயது 51), சுவாதி (வயது 33), நீலிமா (வயது 28) மற்றும் சிவராமகிருஷ்ணா (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது பற்றி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Share This:
Loading...

Recent Posts

Loading...