ஹாலிவுட் படங்களுக்கு நிகராக மிக பிரம்மாண்டமாக உருவாகும் ‘தல 57’!

Share this post:

tha

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முழுவதும் பல்கேரியாவில் தொடர்ச்சியாக 40 நாட்கள்வரை நடைபெறவுள்ளது. இதற்காக ‘தல 57′ படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அண்மையில் ஐரோப்பியா சென்றனர்.

அங்குள்ள உலக புகழ்பெற்ற நிபோயனா ஸ்டுடியோவில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அங்கு படப்பிடிப்பு நடத்தும் முதல் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழி படம் இதுவேயாகும். அதேபோல் இந்திய அளவில் ஷாருக்கானின் தில்வாலே படத்துக்கு பின்னர் அங்கு படப்பிடிப்பு நடத்தும் இரண்டாவது இந்திய படமும் இதுவேயாகும்.

ஹாலிவுட்டில் ‘300 ரைஸ் ஆப் ஆன் எம்பையர்’, ‘தி எக்ஸ்பெண்டபிள்ஸ்(2&3)’, ‘லண்டன் ஹேஸ் பாலன்’ போன்ற படங்களின் படப்பிடிப்பும் இங்குதான் நடந்துள்ளது.

Share This:
Loading...

Recent Posts

Loading...