தாய், தங்கையுடன் சேர்ந்து மனைவியை கட்டிபோட்டு கொடூரமாகத் தாக்கி 6 மாத கருவை கலைத்த கொடூர கணவன்..!

Share this post:

girl

ஆப்கானிஸ்தானில் 6 மாத காப்பிணி மனைவியின் தலைமுடியை அறுத்து கருவை கலைத்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அஸ்காமிஸ்க் மாவட்டத்தை சேர்ந்தவர் அப்துல் கலீல் அசீர் தனது 20 வயது பெண்மணி ஒருவரை, அவரது கணவர் கொடுமையாக தாக்கியுள்ளார். தனது மனைவி 6 மாத கார்ப்பிணி என்று கூட பாராமல் அவரது தலைமுடியை அறுத்து கட்டையை வைத்து தாக்கியதில் அவரது 6 மாத கரு கலைந்துள்ளது.

மேலும், கணவரின் தாயும், சகோதரியும் இப்பெண்ணை கயிற்றில் கட்டி வைக்க, அதனை பயன்படுத்திய கணவர் கொடுமையாக அடித்துள்ளார், மேலும் இதற்கு முன்னர் இப்பெண்ணின் மூக்கினையும் கணவர் அறுத்துள்ளார்.

தற்போது, இந்த சம்பவத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட அப்பெண் குண்டுசில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார், குடும்பத்தினரின் இந்த வெறிச்செயலுக்கு மகளிர் விவகார துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு மட்டுமல்லாமல் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளது.

இந்நிலையில், கணவர் தப்பியோடிவிட்டதால், இக்குற்றத்தில் தொடர்புடைய 2 நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம், மேலும் தப்பியோடிய கணவர் அப்துல் கலீல் அசீர்-யை தீவிரமாக தேடி வருகிறோம் என்று கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது:-

என்னை எனது கணவனின் குடும்பத்தினர் கொடுமைபடுத்திவந்தனர், எனக்கு மற்றொரு ஆணுடன் தொடர்பு இருக்கிறது எனக்கூறி சந்தேகம்கொண்டதால் தான் இவ்வாறு செய்துள்ளர் என கூறியுள்ளார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...