மக்களுக்கு பயந்து அவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ள கடை ஒன்றினுள் பதுங்கிய மஹிந்த..!

Share this post:

ma

அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் கண்டியில் இருந்து கொழும்பை நோக்கிய பாத யாத்திரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த பாத யாத்திரையில் கலந்து கொள்வதற்காக வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சனநெருக்கடியில் சிக்கி அசௌகரியத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாத யாத்திரையில் கலந்துக் கொண்ட மக்களுடன் இடையில் வந்த மஹிந்த ராஜபக்சவும் இணைந்துள்ளார். இணைந்தவர் பாத யாத்திரையின் முன் பகுதி நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளார்.

மஹிந்தவை கண்ட மக்கள் அனைவரும் மஹிந்தவின் கையை பிடிப்பதற்கு முயற்சித்து அவரை சூழ்ந்தமையினால் பாதுகாப்பு பிரிவினருக்கு நிலைமையை கட்டுபடுத்த முடியாமல் போய் உள்ளது.

இதன்போது உடனடியாக மதுமாதவ உட்பட பலர் களத்தில் இறங்கி மஹிந்தவை குறுக்கு வழியில் அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் சனநெருக்கடி குறையும் வரையில் அருகில் இருந்த பெயன்ட் கடை ஒன்றில் மஹிந்த ஒழிந்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அதனை உறுதி செய்யும் வகையில் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...