அந்த பொண்ணு யார் பேச்சையும் கேட்குதில்லை … அமலா பாலின் மாமனார் அதிரடி பேட்டி

Share this post:

amls

அமலா பால் யார் பேச்சையும் கேட்பது இல்லை என்ற இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் தந்தை அழகப்பன் தெரிவித்துள்ளார்.

தெய்வத் திருமகள் படத்தில் நடிக்கும்போது அமலா பாலுக்கும், இயக்குனர் ஏ.எல். விஜய்க்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமான இரண்டே ஆண்டில் அவர்கள் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் இது குறித்து விஜய்யின் தந்தை அழகப்பன் பிரபல தொலைக்காட்சி சேனலுக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியின்போது கூறுகையில்,

உண்மை தான்
விஜய், அமலா பால் பிரிவதாக வந்த தகவல்கள் உண்மை தான். பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் அவர்கள் இன்னும் விவாகரத்து கோரி முறைப்படி விண்ணப்பிக்கவில்லை.

அமலா பால்
திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்க மாட்டேன் என்றார் அமலா. பின்னர் சூர்யா, விஜய் என்று ஒவ்வொருவரின் படமாக நடிக்க ஒப்புக் கொண்டார். இது என் மகனுக்கு சரிப்பட்டு வரவில்லை.

இயக்குனர்
என் மகன் கிரியேட்டர். அவர் டார்ச்சர் இல்லாமல் இருந்தால் தான் சிறப்பாக பணியாற்ற முடியும். அந்த பெண் தன் பாட்டிற்கு படம் மேல் படம் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பேச்சை கேட்பது இல்லை
அமலா பாலிடம் அவரது குடும்பத்தார் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பெண் யார் பேச்சையும் கேட்பது இல்லை. பேச்சை கேட்பது இல்லை என சொல்கிறார்கள். உறுதியாக தெரியவில்லை.

Share This:
Loading...

Related Posts

Loading...