கண்காணிப்பு கமெராவில் சிக்கிய உருவம்: அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர் – அதிர்ச்சி வீடியோ..

Share this post:

arth

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் திருமணமான இளம் ஜோடி ஒன்று தங்களது வீட்டில் அமைத்திருந்த கமெராவில் பதிந்திருந்த உருவத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

சிகாவோ மாகாணத்தில் குடியிருக்கும் ஜோர்டான் மற்றும் ஜாக் ஆகிய இருவரும் சம்பவத்தன்று இரவு நெடு நேரம் தொலைக்காட்சி பார்த்துவிட்டு அசதியில் அப்படியே தூங்கிப்போயுள்ளனர்.

மறுநாள் காலையில் கண்விழித்த பின்னர் தாங்கள் படுத்திருந்த பகுதியில் தூங்கும் முன்னர் வைத்திருந்த பணப்பை திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து தங்களது நாயை கண்காணிக்கும் பொருட்டு அமைத்திருந்த கண்காணிப்பு கமெரா பதிவுகளை சோதனையிட முடிவு செய்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அவர்களது வீட்டின் முதல் மாடிக்கு செல்லும் படிக்கட்டில் நின்று கொண்டு தூங்கும் இவர்களை அமைதியாக நின்று ஒரு உருவம் பார்த்துக்கொண்டே நின்றுள்ளது கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

5 நிமிடங்களுக்கு மேலாக நின்று பார்த்துக்கொண்டிருந்த அந்த உருவம் பின்னர் அங்கிருந்து நடந்து மேலேறி சென்றுள்ளது. மீண்டும் சில நிமிடங்கள் கடந்து திரும்ப வந்து அதே இடத்தில் நின்று இவர்களை பார்த்துக்கொண்டு நின்றுள்ளது.

இந்த பதிவுகளை கண்ட ஜாக், தமது மனைவிதான் அது என நினைத்து, இரவில் படிக்கட்டில் நின்று என்ன செய்தாய் என வினவியுள்ளார், அதற்கு அவர் மனைவி மறுப்பு தெரிவிக்கவே, அவர்கள் வீட்டின் கதவுகள் மூடப்பட்டிருந்ததா என சோதித்துள்ளனர்.

அதில் ஒரு கதவு மூடாமல் விட்டிருந்ததை அவர்களுக்கு தெரிய வந்தது. அந்த கதவு வழியாக குறிப்பிட்ட நபர் உள்ளே புகுந்திருக்கலாம் எனவும், வீட்டில் வேறெதுவும் சிக்காததை அடுத்து பணப்பையுடன் தப்பியுள்ளது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குறிப்ப்ட்ட பதிவுகளுடன் பொலிசாரை அணுகிய அந்த இளம் தம்பதி நடந்த விவகாரம் குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் தொடர்ந்து நடந்த கொள்ளைகளுக்கு இந்த நபர்தான் காரணமாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி அப்பகுதி மக்கள் அனைவரும் இச்சம்பம் குறித்து தங்கள் சமூகவலைத்தள பக்கத்தில் பதிந்து திருடனை கைது செய்ய பொலிசாருக்கு உதவி வருகின்றனர்.

Share This:
Loading...

Recent Posts

Loading...