நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடிய மனைவி: கோபத்தில் கணவன் செய்த கொடூர செயல்..

Share this post:

manaivi

மனைவி நீண்ட கைப்பேசியில் யாரிடமோ வெகுநேரமாக பேசிக் கொண்டிருந்தமையைக் கண்டு ஆத்திரம் அடைந்த கணவன், அவரின் காலை உடைத்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

கோவையைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சாரதியாக பணிபுரிகிறார்.

நேற்று காலை, இவரின் மனைவி கைப்பேசியில் யாரிடமோ வெகுநேரமாக பேசிக் கொண்டிருந்துள்ளார்.

இதைக்கண்ட மணிகண்டன், யாரிடம் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அன்னபூரனி, தனது உறவினர் ஒருவருடன் என்று பதில் கூறியுள்ளார். ஆனாலும், சந்தேகம் அடைந்த மணிகண்டன், இதுபற்றி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சண்டையின் காரணமாக, மணிகண்டன் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மனைவியின் காலில் தாக்கியுள்ளார்.

இதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதில் அலறித்துடித்த அவரை, மணிகண்டன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று மருத்துவர்கள் கேட்டுள்ளனர்.

அதற்கு, மணிகண்டன் வீட்டில் நடந்ததை கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த பொலிஸார் மணிகண்டனை கைது செய்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...