மாமியார் வைத்த விஷ பரீட்சையில் பரிதாபமாக பறிபோன மருமகளின் உயிர்..!

Share this post:

maami

அமராவதியில் மாமியார் வைத்த விஷ பரீட்சையில் மருமகள் பரிதாபமாக உயிரிழந்தாள்.

பணம் திருட்டு
அமராவதியில் உள்ள யசோதாநகர் பகுதியை சேர்ந்தவர் பாரதி(வயது40). இவர் தனது கணவர், மகன், மகள் மற்றும் மாமியார் புஷ்பா(60) ஆகியோருடன் வசித்து வந்தார். புஷ்பா வீட்டில் உள்ள பீரோவில் ரூ.10 ஆயிரம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த பணம் நேற்றுமுன்தினம் திடீரென காணாமல் போனது. மருமகள் பாரதி தான் பணத்தை திருடி விட்டதாக கருதிய புஷ்பா, அவரிடம் சண்டையிட்டார். ஆனால் தான் பணத்தை எடுக்கவில்லை என்று கூறி பாரதி அழுதார்.

ஆனால் பாரதி பொய் சொல்வதாக குற்றம் சாட்டிய புஷ்பா, திடீரென பாரதியிடம் பூச்சி மருந்து பாட்டிலை கொடுத்து குடிக்கும்படி கூறினார்.

மாமியார் கைது
மேலும் நீ திருடவில்லை என்றால் சாக மாட்டாய். திருடி இருந்தால் செத்து விடுவாய் என்று கூறியிருக்கிறார். மாமியார் வைத்த இந்த விஷ பரீட்சையை சற்றும் எதிர்பார்க்காத பாரதி விரக்தியில் குடும்பத்தினர் முன்னிலையில் புஷ்பாவின் கையில் இருந்த பூச்சி மருந்தை வாங்கி குடித்துவிட்டார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாரதியின் கணவர் உடனடியாக அவரை அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே பாரதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த பிரோஜ்பூர் போலீசார் பாரதியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பாரதியின் மகன் மற்றும் மகள் நடந்த சம்பவத்தை போலீசாரிடம் கூறினர். இதையடுத்து போலீசார் புஷ்பாவை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...