17 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சித்தப்பா – மட்டக்களப்பில் சோகம்..!

Share this post:

sirumi

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா மொடர்ன் பாம் வீட்டுத்திட்ட பகுதியில், 17 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (புதன்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் பணிப்பெண்னாக பணியாற்றி வரும் நிலையில், குறித்த யுவதி தனது சின்னம்மாவின் (தாயின் சகோதரி) பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் இருந்து வந்துள்ளார்.

சுமார் 5 வருட காலமாக சின்னம்மாவின் வீட்டில் பாதிக்கப்பட்ட பெண் வசித்து வந்துள்ள நிலையிலேயே, இந்த யுவதி சின்னம்மாவின் கணவரால் சுமார் இரு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ள குடும்பஸ்தர் (வயது-34) மூன்று பிள்ளைகளின் தந்தை எனக் குறிப்பிடும் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...