இங்கிலாந்தில் இருந்து தாயை இலங்கைக்கு அனுப்ப முயற்சித்த மகள் – கத்தியால் குத்திய தாய்..!

Share this post:

makal

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பெண்ணொருவர் தனது மகளை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்படி சம்பவம் இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சித்ரானி மஹேந்திரன், (74 வயது)என்ற தாயாரே குமாரி மஹேந்திரன், என்ற (26 வயது) தனது மகளை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட குமாரி மகேந்திரன் தெரிவிக்கையில்,

தான் உறக்கத்தில் இருந்த போது கத்தியால் குத்தியதாகவும் பின்னர் தான் விழித்துக்கொண்டமையினால் தனது தாய் தன்னை துரத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது தாயார் சுகயீனமுற்றிருந்தமையால் அவரை இலங்கைக்கே அனுப்ப ஏற்பாடு செய்ததாகவும், இதன் காரணமாகவே அவர் இத்தாக்குதலை நடத்தியிருக்கக் கூடுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பிலான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், குறித்த தாய் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், கத்திக்குத்துக்கு இலக்கான குறித்த பெண், 2013ஆம் ஆண்டு ‘மிஸ் வேல்ஸ்’ அழகிப் போட்டியிலும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...