மனைவி வெளிநாட்டில் ; மாமியுடன் உல்லாசம் ; துண்டானது மருமகனின் உதடு – இலங்கையில் சம்பவம்

Share this post:

pho

மாமியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற மருமகன் கீழ் உதட்டின் ஒருபகுதியை இழந்தவாறு கிரிந்திவெலப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த சம்பவத்தில் 65 வயதுடைய மாமியாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 44 வயதுடைய குடும்பஸ்தரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டின் பின் கதவினூடாக உட்பிரவேசித்த மருமகன் தனியாக இருந்த மாமியாரை பாலியல் துஷ்பிரியோகம் செய்ய முயன்றவேளையில் அவரிடமிருந்து தன்னைப் காப்பாற்றி கொள்வதற்காக, மருமகனின் கீழ் உதட்டின் ஒரு பகுதியை கடித்து துண்டாக்கி அவரிடமிருந்து தப்பி தனது கடைசி மகளின் வீட்டுக்குப் பாதுகாப்புக்காகச் சென்ற மாமியார், கிரிந்திவெலப் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாடு செய்துள்ளார்.

தனது மனைவி வெளிநாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையில், தனது மகளைப் பாதுகாப்பிற்காக மாமியாரின் வீட்டில் தங்க வைத்துள்ள குறித்த நபர், மகள் பிரத்தியோக வகுப்புகளுக்காகச் சென்றிருந்த வேளையிலே, வீட்டில் தனிமையில் இருந்த மாமியாரை இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.

கைது செய்யும் போது சந்தேகநபரின் கீழ் உதட்டின் ஒரு பகுதியைக் காணவில்லையென்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிரிந்திவெலப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...