இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்ள சிபிஆர் 250ஆர்ஆருடன் களமிறங்கும் ஹோண்டா – பைக்கின் படங்கள், விவரம் வெளியீடு (Photos)

Share this post:

26-1469520565-all-new-honda-cbr250rr-sports-09

ஹோண்டா நிறுவனம் தயாரிக்கும் 2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக், இந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.

சமீபத்தில் வெளியாகிய 2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக் பற்றிய கூடுதல் விவரங்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

2017 ஹோண்டா சிபிஆர்
250ஆர்ஆர் 2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக், ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம் உற்பத்தி செய்யும் இரு சக்கர வாகனம் ஆகும். இது உலக அளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரு சக்கர வாகனங்களில் ஒன்றாக உள்ளது.

வேரியன்ட்;
2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக், ஏபிஎஸ் மற்றும் நான்-ஏபிஎஸ் எனப்படும் 2 வெவ்வேறு வேரியன்ட்களில் கிடைக்கிறது. ஏபிஎஸ் என்பது ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் என்பதை குறிக்கிறது.

புதிய தொழில்நுட்பம்;
2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக், ஹோண்டா நிறுவனத்தாலேயே உருவாக்கப்பட்ட திராட்டில்-பை-வயர் (Throttle-by-Wire (TbW)) உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களும் கொண்டுள்ளது.
26-1469520559-all-new-honda-cbr250rr-sports-08

இஞ்ஜின்;
லிட்டில் ஃபயர்பிளேட் (“little FireBlade”) என்றும் அழைக்கப்படும் இந்த 2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக், 250சிசி, ஸ்ட்ரெய்ட் ட்வின், லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜினின் செயல்திறன் குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் விரிவான விவரக்குறிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
26-1469520546-all-new-honda-cbr250rr-sports-06

தோற்றம்;
கூர்மையான மற்றும் ஆக்கிரோஷமான ஸ்டைலிங் அம்சங்களுடன் தயாரிப்பு நிலை 2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக், புரோட்டோடைப் பைக் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இதன் எல்இடி ஹெட்லைட்கள், ட்வின் பேரல் எக்ஸ்ஹாஸ்ட்கள் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், இதன் தோற்றத்திற்கு மேலும் அழகு கூட்டுகிறது.

பிரேக்;
2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக்கிற்கு, முன் பக்கத்திலும், பின் பக்கத்திலும் சிங்கிள் பெடல்-ரோட்டர் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
26-1469520540-all-new-honda-cbr250rr-sports-05

சஸ்பென்ஷன்;
2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக்கின் முன் பக்கத்தில் தலைகீழாக பொருத்தப்பட்ட ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோ ஷாக் சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது.
26-1469520578-all-new-honda-cbr250rr-sports-11

அறிமுகம்;
2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக், இந்த ஆண்டில் வரும் மாதங்களில் ஜப்பான் வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும்.

நம் நாட்டில்?
2017 ஹோண்டா சிபிஆர் 250ஆர்ஆர் பைக், இந்தியா ,இலங்கையில் அறிமுகம் செய்யப்படுமா, இல்லையா என்பது குறித்து, இது வரை, எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை.

Share This:
Loading...

Recent Posts

Loading...